மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: 229 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ராயன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 229 காளைகள் பங்கேற்றன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ராயன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 229 காளைகள் பங்கேற்றன.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 233 காளைகள் பங்கேற்றன. இதில், 229 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 4 காளைகள் மருத்துவப் பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
கால்நடை பராமரிப்புத் துறையினர், மருத்துவக் குழுவினர் அனைத்து காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே பங்கேற்க அனுமதி அளித்தனர்.
அதேபோல, வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனைக்குப் பின்னர், 269 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.
இதில், 4 வீரர்களுக்கு மட்டும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் விதிமுறைகளின்படியே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com