சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்: மார்கண்டேய கட்ஜூ

தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மறுசீராய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. சசிகலா 4
சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்: மார்கண்டேய கட்ஜூ

திருச்சி:  தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மறுசீராய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. சசிகலா 4 ஆண்டு தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கூறினார்.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சில எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்கள் ஆதரவு இருந்தாலும், அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவுதான் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உதவும்.

 தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப்பட்டேன். புதியதாக பொறுப்பேற்றுள்ள பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாட்டை 6 மாத காலம் பார்ப்போம். அதன் பிறகே அவரின் ஆட்சி குறித்து விமர்சனம் செய்யலாம்.

 சொத்து குவிப்பு வழக்கில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மறுசீராய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடியே செய்யப்பட்டுள்ளது. அதே போல் சசிகலா மனுவும் தள்ளுபடி செய்யப்படும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே, சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். வெளியே வர முடியாது என்றார்.

 சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து, தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்ரமணிய சுவாமி கூறியதற்கு கருத்து கூற விரும்பவில்லை.

நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சுகாதார உள்கட்டமைப்பு வசதி குறைவு உள்ளிட்ட பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ள நிலையில் ராமர் கோயில் அவசியமற்றது என்று கட்ஜூ கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com