தமிழகம் முழுவதும் திமுகவினர் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைதாகி, விடுதலை

சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.
சென்னை தாம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்.

சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாக, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைதாகி, விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில் ராயபுரம், காசிமேடு, புளியந்தோப்பு, வியாசர்பாடி, கோயம்பேடு, கோடம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, நீலாங்கரை உள்ளிட்ட 32 இடங்களில் சாலை மறியல்களிலும், 29 இடங்களில் பேரவைத் தலைவரின் கொடும்பாவி எரிப்பு போராட்டங்களிலும் திமுகவினர் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 1,550 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், காசிமேடு, நீலாங்கரைப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு, நிலைமை சீரான பின்னர் திறக்கப்பட்டன. கே.கே.நகரில் அரசு பேருந்து மீது கற்களை வீசப்பட்டதால், கண்ணாடிகள் உடைந்தன. போராட்டங்களால், சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சியில்...: திருச்சி மாவட்டத்தில் 31 இடங்களில் நடைபெற்ற மறியலில் 1,400 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையில்...: புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியதாக மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்ட 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சையில்...: தஞ்சாவூரில் மறியலில் ஈடுபட்டதாக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் மொத்தம் 36 இடங்களில் நடைபெற்ற போராட்டத்திலும் ஈடுபட்ட சுமார் 1,400 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவையில்...: புதுவையில் 2 இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாக தெற்கு மாநில திமுக அமைப்பாளரும் எம்எல்ஏ சிவா, முன்னாள் முதல்வர் ஜானகிராமன், வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
நாகையில்...: மயிலாடுதுறையில், கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் 41 இடங்களில் நடைபெற்ற மறியலில் 1520 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூரில்...: பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 256 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரியலூரில்..: அரியலூரில் மறியலில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல்..: நாமக்கல் அண்ணா சிலை முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக துணைப் பொதுச் செயலர் வி.பி.துரைசாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் உள்ளிட்ட 56 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட 16 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 776 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம்...: சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர்...: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில்..: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில்..: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூரில்..: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 800-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com