தாழ்த்தப்பட்டோர் முன்னுக்கு வரக் கூடாதா? திமுக மீது பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முன்னுக்கு வரக் கூடாது என்ற எண்ணத்துடன் திமுகவினர் செயல்படுகின்றனர் என சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் குற்றம்சாட்டினார்.
தாழ்த்தப்பட்டோர் முன்னுக்கு வரக் கூடாதா? திமுக மீது பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் முன்னுக்கு வரக் கூடாது என்ற எண்ணத்துடன் திமுகவினர் செயல்படுகின்றனர் என சட்டப் பேரவைத் தலைவர்
பி.தனபால் குற்றம்சாட்டினார்.
சட்டப் பேரவையில் அவர் படித்து அளித்த அறிக்கை:-
பேரவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று இருந்தேன். ஆனால், நான் (தனபால்) நீலிக்கண்ணீர் வடிப்பதாக மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதனால், மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், அது குறித்த சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த என்னை (தனபால்) பேரவைத் தலைவர் எனும் பெரிய பதவியில் அமர்த்தி, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எனினும், அவையின் விதிகளையும் மரபுகளை மீறாமல் செயல்பட்டதால்தான் இரண்டாம் முறையாகவும் பேரவைத் தலைவராக இருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் இங்கே திமுக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை நடத்தியிருந்தால்கூட கவலைப்பட்டிருக்கமாட்டேன்.
பேரவைத் தலைவர் என்ற முறையில் பணியாற்றுகையில் அந்தப் பதவிக்கும் மரியாதை தராமல், தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றிய ஒரு நாடகமாகவே பேரவை நிகழ்வுகளைக் கருதுகிறேன்.
தாழ்த்தப்பட்ட இன மக்களை அடக்கிவிடலாம், இந்தச் சமூகம் வளரக் கூடாது என நினைத்து திமுகவினர் இங்கே செயல்பட்டிருந்தால், உண்மையிலேயே நான் (தனபால்) சார்ந்துள்ள சமூகத்தின் சார்பாக தனபால் என்ற தனிமனிதனாக அதனை என்றென்றும் எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளேன்.
சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் ஆன பின்பும் தாழ்த்தப்பட்ட சமூகம் முன்னுக்கு வரக்கூடாது என்றும் அந்தச் சமுதாயத்தைச் சார்ந்த எவரும் உயர் பதவியில் இருக்கக்கூடாது என்ற எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடாகவும் இங்கு நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்க்கிறேன்.
எனவே, திமுகவின் எம்எல்ஏக்களுக்கு கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இந்தப் பிரச்னையை முடித்துவிடுகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com