பன்றிக் காய்ச்சல்: திண்டுக்கல் பெண் சாவு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல் பெண் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல் பெண் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல், பேகம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவரது மனைவி ஹாஜீரா பீவி (63). கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஹாஜீரா பீவி, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் 27 பேருக்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என சனிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த 27 பேருக்கும், தொண்டையிலிருந்து சளி மற்றும் எச்சில் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நலப் பணிகள் இணை இயக்குநர் மாலதி பிரகாஷ் கூறுகையில், பரிசோதனை மாதிரிக்கான முடிவுகள் வந்த பின்னரே, ஹாஜீரா பீவியின் உறவினர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தெரிய வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com