பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை: மார்ச் 12ல் மறியல் போராட்டம்!

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி கோவை-கேரளா சாலையில் வரும் மார்ச் 12-ஆம் தேதி மறியல்

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி கோவை-கேரளா சாலையில் வரும் மார்ச் 12-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க, போராட்டக்குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்தார். கேரள அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருப்பதாக குறிப்பிட்டார்.

மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 12-ஆம் தேதி தமிழக-கேரளா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com