பேரவை நடவடிகைகள் சட்ட விரோதமானது: ஆளுநரிடம் திமுக எம்.பிக்கள் மனு!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்   பொழுது அரங்கேறிய சம்பவங்கள் சட்ட விரோதமானது என்று திருச்சி சிவா தலைமையில் ...
பேரவை நடவடிகைகள் சட்ட விரோதமானது: ஆளுநரிடம் திமுக எம்.பிக்கள் மனு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்   பொழுது அரங்கேறிய சம்பவங்கள் சட்ட விரோதமானது என்று திருச்சி சிவா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நேற்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும்  ஒத்தி வைக்கபட்டது.பின்னர் மீண்டும் கூடிய பொழுதும் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் மீண்டும் சபை மூன்று மணி வரைக்கும் ஒத்திவைக்கபப்ட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக்  கண்டித்து சட்டசபை வளாகத்தில் தரையிலமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார். பின்னர் உடனடியாக ஆளுநர் வித்யாசாகரராவிடம் ஸ்டாலின் இது தொடர்பாக புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மெரினா காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூட்டாக இன்று காலை  ஆளுநரை சந்தித்து  மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து திருச்சி  சிவா கூறியதாவது:

திமுகவின் சட்டமன்றத் தலைவர் ஸ்டாலின் சார்பில் இந்த மனுவை நாங்கள் ஆளுனரிடம் அளித்துள்ளோம். நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அவையில் அரங்கேறிய விவகாரங்கள்  குறித்து அவருக்கு விளக்கினோம். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பானது சட்ட விரோதமானது. காவல்துறையினர் சட்டமன்ற அவைக் காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றியிருப்பதன் மூலம் இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்பது உறுதியாகிறது.

நாங்கள் அளித்த மனுவை கண்டிப்பாக பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிவா தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com