மக்கள் தீர்ப்பளிப்பர்: ஓ.பன்னீர்செல்வம்

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முடித்து விட்டு வெளியே வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை முடித்து விட்டு வெளியே வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்களின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பேரவை வளாகத்தில் சனிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மம் வெல்லுவதற்கு மீண்டும் கால அவகாசம் உள்ளது. உறுதியாகச் சொல்லுகிறேன். இறுதியில் தருமமே வெல்லும்.
15 நாள்கள் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களை தொகுதிக்கு அனுப்பி வேண்டும் என்றும் ஒரு வாரம் கழித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பேரவையில் வலியுறுத்தினோம். ரகசிய வாக்கெடுப்பு தேவை என்றோம். இதை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
திமுக எம்எல்ஏக்களை காயப்படுத்தி...: பேரவைக் கூட்டத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இதே கருத்தை வலியுறுத்திய திமுக எம்எல்ஏக்களை பலவந்தமாக காயப்படுத்தி, ஜனநாயக மரபுகளை மீறி அவர்களை வெளியேற்றி, தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என்ற தீர்ப்பு மக்களிடம் விடப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா யாரைக் கட்சியில் இருந்தும், தன் வீட்டிலிருந்தும் ஒதுக்கி வைத்தாரோ, தான் உயிரோடு இருக்கும் வரை யாரை அனுமதிக்கவில்லையோ அவர்களின் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை. சசிகலாவின் ஆட்சிதான் நடக்கிறது. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி உறுதியாக ஏற்படும் என்றார்.
தர்ம யுத்தம் நடக்கும்- பாண்டியராஜன்:
இதுகுறித்து எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் கூறியது:-
ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் அதிகமானோர் எதிர்த்து வாக்களித்திருப்பர். சட்டப்பூர்வமான நிலைப்பாடுகளை ஆளுநரும், நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளட்டும். நிச்சயம் ஜெயலலிதாவின் ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமையும். அதற்கான தர்ம யுத்தம் நடைபெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com