ரியல் எஸ்டேட் மூலம் சுமார் ரூ. 100 கோடி மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம்

முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகவும், அவற்றை மீட்டுத்தருமாறும் திருச்சியில் நிதிநிறுவன

திருச்சி: முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் ரூ. 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகவும், அவற்றை மீட்டுத்தருமாறும் திருச்சியில் நிதிநிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் ஜிஎம்ஜி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிதிநிறுவனம் மற்றும் ரியல்எஸ்டேட் அலுவலகம் உள்ளது. அதில் சுமார் 450-க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தலா ரூ. பல லட்சம் வரையில் முதலீடு செய்துள்ளனர். மேலும் மாதத்தவணையில் நிலம் வாங்குவதற்காக ரொக்கமும் செலுத்தி வந்துள்ளனர்.

சிலருக்கு நிலமும், முதிர்ச்சியடைந்த முதலீடு மற்றும் உரிய வட்டிப்பணமும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோருக்கு முதலீடு செய்த தொகை மற்றும் உரிய வட்டி உள்ளிட்டவற்றை திரும்ப வழங்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து நிறுவன உரிமையாளர் ஜி. முருகேசன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி உள்ளிட்டோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உரிய தொகையை திரும்பத் தருவதாகவும், நிலத்துக்கு பணம் கட்டியவர்களுக்கு நிலமும் வழங்குவதாகவும் நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டபடி வழங்காததால் வாடிக்கையாளர்கள் மேலும் கேட்டபோது கடந்த சில நாட்களாக அலுவலகம் மூடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தில்லைநகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். புகார் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்புடை நிறுவன பங்குதாரர்கள் சிலர் இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனவும், இது தொடர்பாக யாரேனும் தங்களை அணுகினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாகவும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com