கடும் வறட்சி: உணவு, குடிநீர் தேடி சாலையில் திரியும் வன விலங்குகள்

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், கடும் வறட்சி நிலவுவதால் உணவு, குடிநீர் தேடி சாலையில் வன விலங்குகள் சுற்றித் திரிகின்றன.
முதுமலையில் கடும் வறட்சி நிலவுவதால் இரை, குடிநீர் தேடி சாலையில் திரியும் மான்.

இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. காடுகள் உலர்ந்து காணப்படுவதால் வெப்பமும் அதிகரித்துள்ளது. நீர்
நிலைகள் முற்றிலும் வறண்டு விட்டன. மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்து விட்டதால், குரங்குகள், பறவைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதில்லை.
இதனால், மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி கூடலூர் - பெங்களூரு சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com