ஜாதியை முன்னிறுத்தி பேரவைத் தலைவர் பேசுவதா?: விஜயகாந்த் கண்டனம்

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் ஜாதி குறித்து பேசியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுபோல் பேரவையில் ரகளை ஈடுபட்ட திமுகவினருக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜாதியை முன்னிறுத்தி பேரவைத் தலைவர் பேசுவதா?: விஜயகாந்த் கண்டனம்

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் ஜாதி குறித்து பேசியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுபோல் பேரவையில் ரகளை ஈடுபட்ட திமுகவினருக்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டசபை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் பேரவைத் தலைவர் தெரிவிக்கிறார். ஆனால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும், பேரவைத் தலைவர் தவறான தகவலை கூறுவதாகவும் தெரிவிக்கிறார்.
பேரவைத் தலைவரை பேசவிடாமல் தி.மு.க.வினர் தடுப்பது, அவரது இருக்கையில் ஒருவர் மாறி ஒருவர் அமருவது, மைக்கை பிடுங்கி அவரிடம் நீட்டி பேசு பேசு என அராஜகத்தில் ஈடுபடுவது, கையை பிடித்து இழுப்பது, சட்டையைக் கிழிப்பது, காகிதத்தை கிழித்து வீசுவது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது, பேரவை மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக உள்ளது. சட்டப்பேரவை தலைவர், உறுப்பினர்களால் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் உலகமே பார்த்து கொண்டிருந்த இந்த வேளையில், பேரவைத் தலைவரோ தனது சமூகத்தையும், தான் சார்ந்த ஜாதியையும் முன்னிறுத்தி வெளிப்படுத்திய கருத்து சபையின் மாண்பையும், கண்ணியத்தையும் கெடுக்கும் வகையில் உள்ளது.
கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், ஜாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது.
இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்கத் தயாராகி விட்டார்கள். தே.மு.தி.க வை சார்ந்தவர்கள் மக்கள் பிரச்னைக்காக அவையில் குரல் கொடுத்த போது, சஸ்பெண்ட் செய்த இதே சபாநாயகர், இன்றைக்கு அனைவரும் பார்க்கக்கூடிய அராஜகத்தை அரங்கேற்றிய தி.மு.க.வினரை எத்தனை ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்புவதை கேட்க முடிகிறது என்று விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com