மெரீனாவில் திமுக போராட்டம்: மு.க.ஸ்டாலின் மீது வழக்கு

மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக, மு.க.ஸ்டாலின் உள்பட 2,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மெரீனாவில் திமுக போராட்டம்: மு.க.ஸ்டாலின் மீது வழக்கு

மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக, மு.க.ஸ்டாலின் உள்பட 2,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டதாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் பேரவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
பின்னர், சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே திமுகவினருடன் ஸ்டாலின் தடையை மீறி போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில், ஸ்டாலின் 63 எம்எல்ஏக்கள், 3 எம்பிக்கள் உள்ளிட்ட 2000 திமுகவினர் மீது தடையை மீறி போராட்டம் நடத்தியது, சட்ட விரோதமாக கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com