சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள், பேரவைத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் சட்டையும் கிழிக்கப்பட்டது. ஊருக்கு சென்றால் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பாதுகாப்பு வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கோருகின்றனர்.
கடந்த 20 நாள்களாக கூவத்தூர், ராயப்பேட்டை, கீரின்வேஸ் சாலை எனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீஸார் இனி எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆட்சி- அதிகாரத்துக்காக நடைபெற்ற மோதல் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம்: முதல்வராகப் பொறுப்பேற்று தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை சென்ற எடப்பாடி பழனிசாமி, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இருப்பினும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வறட்சி நிவாரணம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.25,000, குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு போன்ற நடவடிக்கைகளை விரைவாக முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com