டிராவல்ஸ் உரிமையாளர் பாபுசிங் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

டிராவல்ஸ் உரிமையாளர் பாபுசிங் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பரூக்கை புனேயில் போலீஸார் கைது

சென்னை: டிராவல்ஸ் உரிமையாளர் பாபுசிங் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பரூக்கை புனேயில் போலீஸார் கைது செய்துள்ளனர்.  

சென்னை சூளை டிமெலோஸ் சாலையைச் சேர்ந்தவர் பாபுசிங். இவர் சௌகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இவர் தனது நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் தங்க நகைக் கடை வைத்திருக்கும் ராம்சிங்கின் (36) பெற்றோருக்கும், பாபுசிங்கின் பெற்றோருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் எதிரெதிரே வீடுகள் உள்ளதும், இதில் ஏற்பட்ட பிரச்னையால் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படையால் பாபுசிங் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதில், ராம்சிங் உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாபுசிங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கூலிப்படைத் தலைவன் பரூக்கை புனேயில் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பரூக் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com