மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

கீழடி அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்ட மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி

கீழடி அகழாய்வு பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்ட மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் தமிழக நாகரிகத்தின் அடையாளத்தை உணர்த்தும் விதமாக 5,300-க்கும் மேற்பட்ட பல அரிய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில், தமிழர்களின் நாகரிகம் குறித்த மிக முக்கியமான தகவல்கள் கீழடியில் கிடைத்துள்ளன. இந்தப் பணியை மத்திய அரசு பாதியில் திடீரென்று நிறுத்தி விட்டது. இந்த ஆய்வை தொடரும்படி, மத்திய அரசை அண்மையில் வலியுறுத்தி கடிதம் எழுதியும், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மூலமும் கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இதையடுத்து, பணிகளை மீண்டும் தொடங்க மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா உத்தரவிட்டுள்ளார். அவருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com