மர்மக் காய்ச்சல்: 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பொன்பாடி மேட்டுக்காலனி கிராமத்தில் மர்ம காய்ச்சல் வந்ததால், அரசு பள்ளி மாணவர்கள் ஏழு பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொன்பாடி மேட்டுக்காலனி கிராமத்தில் மர்ம காய்ச்சல் வந்ததால், அரசு பள்ளி மாணவர்கள் ஏழு பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருத்தணியை அடுத்த பொன்பாடி மேட்டுக்காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன்கள் வெற்றி (10), தருண் (8), சண்முகம் மகன் வசந்தகுமார் (8), பொன்னைய்யன் மகன் விக்ரம் (9), பாலாஜி மகன் அஜித் (8), சிவா மகன் ராஜசேகர் (8), நரசிம்மன் மகள் ரஞ்சினி (12). இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்ற இவர்கள் ஏழு பேரும் தங்களுக்கு காய்ச்சல் இருப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை ஆசிரியர்கள் அழைத்து, அவர்களது குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கூறுகையில், "மாணவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் உள்ளது. யாரும் ஆபத்தான நிலையில் இல்லை. எனவே, விரைவில் அனைவரும் வீடு திரும்புவர்' என்றனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி வட்டாட்சியர் பரணிதரன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நாச்சேகவுடா, பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com