ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் முடிவு மத்திய அரசின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும், 3 நாள்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் விடுதலை செய்யப்படுவர் என்றும் 2014-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இறுதி விசாரணைக்கு வரவில்லை.
7 பேரும் 26-ஆவது ஆண்டாக தண்டனையை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடல்நலக் குறைவாலும், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மனச்சிதைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, நளினி-முருகன் தம்பதி தங்களது மகளின் திருமணத்துக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, வழக்கை தொடர்ந்து நடத்துவதைவிட மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com