என்.எல்.சி. நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் (பங்கர்), திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் (பங்கர்), திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1-ஏ-வில் வெட்டி எடுக்கப்பட்ட பல ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி, அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால், அழுத்தம் காரணமாக நிலக்கரிக் குவியல் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, நிலக்கரி குவியல் மீது இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாகத் தரப்பில் கூறியதாவது:
சேமிப்புக் கிடங்கில் (பங்கர்) குவித்து வைக்கப்பட்டிருக்கும் பழுப்பு நிலக்கரி, அழுத்தம் காரணமாக எரிவது சகஜமான ஒன்றுதான். எனவே, அவ்வப்போது நிலக்கரிக் குவியலின் மீது தண்ணீர் ஊற்றிப் பாதுகாக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com