'தமிழுக்கு உ.வே.சா. ஆற்றிய தொண்டை இளைஞர்கள் உணர வேண்டும்'

தமிழுக்கு உ.வே.சா. ஆற்றிய தொண்டை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும் என மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன்
விழாவில் பேசுகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன்.
விழாவில் பேசுகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன்.

தமிழுக்கு உ.வே.சா. ஆற்றிய தொண்டை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும் என மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான எஸ்.ஜெகதீசன் தெரிவித்தார்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் 162 ஆவது பிறந்த நாள் விழா கூட்டம் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் பேசியதாவது:
தமிழுக்கு உ.வே.சா. ஆற்றிய தொண்டை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். சிறந்த தமிழ் புலமைக் கொண்ட அவர், ஓலைச்சுவடிகளாக கிடைத்த சங்க இலக்கியங்களை புத்தக வடிவில் கொண்டு வந்தவர்.
ஓலைச் சுவடிகளைச் சேகரிக்க பல கஷ்டங்களை அனுபவித்தபோது அவருக்கு ராமசாமி முதலியார் உதவியுள்ளார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் படித்த உ.வே.சா. அந்த நாட்டின் ராஜ விசுவாச பிரமாணம் செய்ய மறுப்பு தெரிவித்து, பட்டம் பெற மறுத்துள்ளார். தமிழ் சமூகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும் என்றார்.
இதையடுத்து, முனைவர் மணிமேகலை சித்தார்த் பேசுகையில், 'உலக மொழியியல் ஆய்வாளர்கள் மன்றம் மேற்கொண்ட ஆய்வில் அனைத்து தகுதிகளையும் கொண்ட மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் உ.வே.சா' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com