ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது எப்படி? உயரதிகாரிகள் நேரில் விளக்கம்

சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் அதிகாரியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து, ராணுவ உயரதிகாரிகள் திங்கள்கிழமை (பிப்.20) விளக்கம்
கயிறு மேல் நடக்கும் பயிற்சியை மேற்கொள்ளும் பயிற்சி அதிகாரிகள்.
கயிறு மேல் நடக்கும் பயிற்சியை மேற்கொள்ளும் பயிற்சி அதிகாரிகள்.

சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் அதிகாரியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து, ராணுவ உயரதிகாரிகள் திங்கள்கிழமை (பிப்.20) விளக்கம் அளித்தனர்.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிற்சிகள் குறித்து கர்னல் சிவா தமிழமுதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கயா, சென்னை, டேராடூன் ஆகிய 3 இடங்களில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையங்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் பயிற்சி முடித்து ராணுவப் பணிக்குச் செல்கின்றனர். சென்னையில் பெண் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
துப்பாக்கி சுடுதல், குதிரை ஏற்றம், மணல்- மலையில் ஓடுதல், கயிறு, சுமைகளுடன் தடை தாண்டி ஓடுதல், ஏறுதல், படகுப் பயிற்சி, இலக்கை குறிவைத்து தாக்குதல், எல்லைப் பகுதியில் நீர்நிலைகளிலும் குளிர் பிரதேசங்களிலும் பதுங்கி தாக்குதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் உடல் வலிமைக்கும், மன வலிமைக்கும் உறுதி சேர்க்கும் வகையில் அளிக்கப்படுகின்றன.
பயிற்சி நிறைவு: தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சிக்கான நிறைவு விழா மார்ச் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. 35 பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்த 22 பேர் உள்பட 245 பேர் பயிற்சி முடிந்து ராணுவப் பணிக்கு செல்ல இருக்கின்றனர் என்றார். இந்த மையத்தில், தடை தாண்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரோடு ரயில்வே காலனியைச் சேர்ந்த அஸ்மாதாஸ், ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த சுமுதி சுபதி ஆகியோர் கூறுகையில், 'உந்துதல், ராணுவச் சீருடை மீது ஏற்பட்ட விருப்பம் காரணமாக இந்தப் பணிக்கு வந்தோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com