ஸ்டாலின் வழக்கு வெற்றி பெறும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக அத்துமீறல்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
ஸ்டாலின் வழக்கு வெற்றி பெறும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக அத்துமீறல்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் சுதேசி ஆலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 

துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், பொருளாளர் சண். குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், தட்சிணாமூர்த்தி, வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாநில திமுக
புதுச்சேரி வடக்கு மாநில திமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார்.

முன்னாள் முதல்வர் ஆர்.வி..ஜானகிராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி.திருநாவுக்கரசு, அவைத்தலைவர் ஆர்.பலராமன் ,துணைஅமைப்பாளர்கள், ஏகே..குமார் (எ)கிருஷ்ணன் , சுந்தரி அல்லிமுத்து  பொருளாளர் செந்தில்குமார் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, கோகுல், பழனி, பிரபாகரன், ரவீந்திரன் சத்யா ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின் வழக்கு வெற்றி பெறும்: நாராயணசாமி
திமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் நாராயணசாமி நேரில் வந்து வாழ்த்திப் பேசினார்.
அப்போது நாராயணசாமி பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலையாகும். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரியும் அதை பேரவைத் தலைவர் நிராகரித்துள்ளார்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினால் அதை ஏற்க வேண்டும் என விதிகள் உள்ளன. 

எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு, வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து ஸ்டாலின் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு வெற்றி பெறும். தருமம் தான் எப்போதும் வெல்லும்.

திமுகவின் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். தமிழக மக்கள் ஜனநாயக விரோத முறையில் வந்துள்ள அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்றார் நாராயணசாமி.

அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், ஆர்.கமலக்கண்ணன், தில்லி பிரதிநிதி ஏ.ஜான்குமார் உள்பட காங்கிரஸாரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com