அதிமுக ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு

அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றார் திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
திருச்சியில் புதன்கிழமை திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசுகிறார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
திருச்சியில் புதன்கிழமை திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசுகிறார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றார் திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடத்துவது எங்களின் சுயநலத்துக்காக அல்ல. தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி ஆட்சியை அகற்றுவதற்காகத்தான். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ஜெயலலிதா தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும் எனக் கருதி அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தார்கள். இதுபோன்ற பினாமி ஆட்சியை நடத்துவதற்காக அல்ல.
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்று போய்விட்டோம் என மூலையில் முடங்கிப் போய்விடவில்லை. ஆட்சி அமைக்க முடியவில்லை எனக் கருதி துறவறம் பூணவில்லை. வெற்றி, தோல்வி என இரண்டையும் சமமாகக் கருதி, தமிழகத்தின் முன்னேற்றதுக்காகப் பாடுபட்டு வருகிறோம். இந்த ஆட்சி நீடித்த, நிலையான ஆட்சி அல்ல. இந்த ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், திமுக ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும், ஆனால் அதற்கு முன்பாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற அறிவிப்புதான் முதல் அறிவிப்பாக இருக்கும்.
திமுகவை பொருத்தவரை அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. நாங்கள் நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த உடனேயே ஆட்சியைó கைப்பற்றியிருக்க முடியும். கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது. அதை எங்களுக்கு அண்ணாவும், கருணாநிதியும் கற்றுத் தரவில்லை. மக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமையும்.
கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எங்களிடம் ஆதாரங்களை நீதிமன்றம் கோரியுள்ளது. குடியரசுத் தலைவரையும் நாங்கள் சந்திக்க உள்ளோம். இந்த ஆட்சியை அகற்றும் வரை திமுகவின் போராட்டம் தொடரும், அதற்கு மக்கள் தங்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
தொடர்ந்து, மாணவர்கள் ஸ்டாலினுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
முன்னதாக, சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com