தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம்

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் புதன்கிழமை (பிப்.22) உண்ணாவிரதப
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக, சென்னை தங்கசாலையில் ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக, சென்னை தங்கசாலையில் ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் புதன்கிழமை (பிப்.22) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சியில்...: திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
சென்னையில்: சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அதன் மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் தங்கசாலை அரசு அச்சகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இங்கு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.எஸ்.இளங்கோவன் பங்கேற்றுப் பேசியது:
அதிமுகவின் முக்கியமான பதவியை அடைவதற்கு எடப்பாடி பழனிசாமி எவ்வளவு குற்றங்கள் செய்ய முடியுமோ, அவ்வளவு செய்துள்ளார். பேரவையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ரகசிய வாக்கெடுப்பு என்று கோரியும் அதை பேரவைத் தலைவர் ஏற்காதது கண்டிக்கத்தக்கது என்றார்.
தென்சென்னை மேற்கு சார்பில் அதன் மாவட்டத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எச்.வசந்தகுமார், மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, மகள் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
தென்சென்னை தெற்கு சார்பில் அதன் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், ஸ்டாலின் மகன் உதயநிதி, திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்கவிநாயகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை வடக்கு சார்பில் அதன் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம் தலைமையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் போராட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரையில்...: காஞ்சிபுரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மூன்று இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 7 சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
மதுரை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில், திமுகவின் தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம், மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேனி, விருதுநகர்..: தேனி மதுரை சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
விருதுநகரில் நடைபெற்ற உண்ணாவிரத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை) தங்கம் தென்னரசு (திருச்சுழி), தங்க பாண்டியன் (ராஜபாளையம்), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்) உள்பட 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் திமுக மாவட்ட செயலர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுமான அர.சக்கரபாணி (மேற்கு), பெ.செந்தில்குமார் (கிழக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலியில்...: பாளையங்கோட்டையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில்
2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாளையங்கோட்டை, வள்ளியூர், தென்காசி ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கோவையில்...கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு திமுக மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நாச்சிமுத்து, மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
பொள்ளாச்சியில்... பொள்ளாச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர், நாகப்பட்டினத்தில்...: நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் திமுக சார்பில் 3 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில்...: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாகை மாவட்ட (வடக்கு) திமுக பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார்.
காரைக்காலில்...: காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே மாதாகோயில் வீதி - அம்பேத்கர் வீதி சந்திப்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com