திருச்சியில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் புதன்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. ஒரு சில விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு திருச்சிக்கு தாமதமாக வந்து சென்றன.
திருச்சியில் புதன்கிழமை காலையில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காவிரி பாலத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டு வரும் பேருந்து.
திருச்சியில் புதன்கிழமை காலையில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக காவிரி பாலத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டு வரும் பேருந்து.

திருச்சியில் புதன்கிழமை காலை நிலவிய கடும் பனிப்பொழிவால் ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. ஒரு சில விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு திருச்சிக்கு தாமதமாக வந்து சென்றன.
திருச்சி மண்டலப் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதலே கடுமையான பனிமூட்டமும், மிதமான குளிரும் நிலவியது. இதன் காரணமாக, திருச்சிக்கு புதன்கிழமை காலை வந்து சேர வேண்டிய ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.
சென்னையிலிருந்து திருச்சி வந்த மலைக்கோட்டை மற்றும், மங்களூர் விரைவு ரயில்கள் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தாமதமாக திருச்சி வந்தடைந்தன. அதேபோல தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்களும் தாமதமாக சென்றன.
விமானப் போக்குவரத்தும் பாதிப்பு: இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து திருச்சிக்கு காலை 8.40-க்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் விமானம் பனிமூட்டம் காரணமாக திருச்சியில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் 2 மணி நேரம் தாமதமாக காலை 10.40-க்கு திருச்சி வந்தது.
அதேபோல சென்னையிலிருந்து திருச்சி வந்து செல்ல வேண்டிய ஏர் கார்னிவெல் உள்நாட்டு விமானமும் காலை 9.10-க்கு தரையிறங்குவதற்கு பதிலாக, அரை மணி நேரம் தாமதமாக வந்து சென்றது.
தஞ்சை விமானப்படை தளத்தில் இறங்க வேண்டிய இந்திய விமானப் படைக்குச் சொந்தமான "04எஸ்யு. 30 எம்கேஐ' ரக 4 பயிற்சி விமானங்கள் நள்ளிரவு 1.40 மணிமுதல் தஞ்சையில் தரையிறங்க முடியவில்லை.
இதனையடுத்து சில மணி நேரங்கள் வானத்தில் வட்டமடித்து, பின்னர் திருச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டன. பின்னர் தஞ்சை புறப்பட்டுச் சென்றன.

காரைக்காலில் பனி மூட்டம்

காரைக்காலில் திடீரென புதன்கிழமை அதிகாலை பனிமூட்டம் அதிகரித்த நிலையில், காலை 8.30 மணி வரை சாலைப் போக்குவரத்தில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
கடற்கரையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை கடலோர கிராமங்கள், குடியிருப்புகள் பனியால் மறைக்கப்பட்டிருந்தது.
இதேபோல், காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பனியால் மறைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் இருக்கும் மரங்கள், ஆற்றுப் பாலங்கள், ரயில்வே பாலம் உள்ளிட்டவை தெளிவாக கண்ணுக்குத் தெரியாததால், பேருந்து, லாரிகள், பள்ளி செல்லும் வேன்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெட்லைட் பயன்படுத்தியவாறு, மெதுவாகச் செல்ல நேரிட்டது. காலை 8.30 மணிக்குப் பின்னர், படிப்படியாக பனி மூட்டம் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com