விவசாயிகள் அனைவருக்கும் நிவாரண உதவி: தலைவர்கள் வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ: தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள வறட்சி நிவாரண உதவி 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், 5 ஏக்கருக்கு கூடுதலாக வைத்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளும் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் கருகியதாலும், பருவமழை பொய்த்ததாலும்,விவசாயிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 5 ஏக்கர் என்ற உச்சவரம்பைத் தளர்த்தி, வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இரா. முத்தரசன்: வறட்சியின் காரணமாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், 17 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி அறிவிக்கப்படாததால், ஒரு கோடி தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மக்களின் துயர உணர்வைப் பிரதிபலிக்காத வறட்சி நிவாரண நிதி குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். நிவாரண நிதியை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமாக உயர்த்தி அளிக்க வேண்டும்.
அன்புமணி: வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்கினால் போதுமானது என்ற அணுகுமுறை தவறானது. ஒவ்வொருவருக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்ற கோணத்தில் நிவாரணத் திட்டத்தை வகுக்க வேண்டும். பயிர்களைப் பயிரிட்டு, வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. வறுமையின் கொடுமையால் பயிர்களைப் பயிரிடவே முடியாதவர்களுக்கும், வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com