தீபா இன்று புது கட்சி தொடங்குகிறாரா...?

சசிகலாவை விரும்பாத அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர்.
தீபா இன்று புது கட்சி தொடங்குகிறாரா...?

சென்னை: சசிகலாவை விரும்பாத அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக திடீரென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்கொடி உயர்த்தியதையடுத்து தமிழக அரசியிலிலும் அதிமுகவிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழந்தது.

சசிகலாவுக்கு ஆதரவாக சில முக்கிய நிர்வாகிகள் அவரது குடும்பத்தினர் செயல்பாடுகளை விரும்பாத அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக திரும்பினர்.  

இந்தநிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தீபா கடந்த வாரம் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இது, தீபா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, நிர்வாகிகளை சந்தித்த தீபா, கடைசி வரை உங்களுக்காகவே பாடுப்படுவேன். ஒருபோதும் உங்களை கைவிட மாட்டேன் என்றார்.

இந்நிலையில், புதிய கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வ அறிவிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதன்படி, மறைந்த முன்னாள் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று தீபா தனது தி.நகர் இல்லத்தின் முன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரவை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, 6.30 மணியளவில் மதுரவாயலில் உள்ள ஆதரவற்றோர் அனாதை இல்லத்தில் உணவளிக்கிறார். பின்னர், பகல் 12 மணிக்கு  தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தனது இல்லம் அருகில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்.  

மாலை 5 மணியளவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் தீபா பேரவையின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். தொடர்ந்து, பேரவையின் கொடியை அறிமுகப்படுத்தி வைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார்.

மேலும் இன்று ஆர்.கே., நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள போவதில்லை எனவும் கூறியுள்ளார்.  

அதிமுகவின் தலைமையை ஏற்கும் தகுதி ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது. அவர் அதிமுகவுக்குத் திரும்ப வேண்டும். எந்த நிலையிலும் அதிமுக உடையக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதிமுக உடைந்தால், திமுக ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எனது சகோதரி ஜெ.தீபா (ஜெயலலிதாவின் அண்ணன் மகள்) கூட அந்தப் பதவியை அடைவதற்கு முயற்சிக்கலாம். தினகரனுக்கும், வெங்கடேஷுக்கும் பெரிய பொறுப்பைக் கொடுத்ததை அதிமுகவினர் யாரும் ஏற்க மாட்டார்கள். அதிமுகவின் தலைமையை ஏற்கும் தகுதி டி.டி.வி.தினகரனுக்கு இல்லை எனவும் எனது சகோதரி தீபாவுக்கு கூட அந்தப் பதவியை அடைவதற்கு முயற்சிக்கலாம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com