தஞ்சை ஆட்சியரக 3ஆவது தள மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது

தஞ்சாவூரில், புதிய ஆட்சியரகத்தின் மூன்றாவது தளத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு வியாழக்கிழமை பெயர்ந்து விழுந்தது.

தஞ்சாவூரில், புதிய ஆட்சியரகத்தின் மூன்றாவது தளத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு வியாழக்கிழமை பெயர்ந்து விழுந்தது.
புதிய ஆட்சியரக வளாகம் கடந்த 2012ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி, 2015ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட்டது. மொத்தம் 61.42 ஏக்கரில் ரூ. 30.50 கோடியில் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 4 அடுக்குகள் கட்டப்பட்டன.
இந்நிலையில், மூன்றாவது தளத்திலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் வழியில் உள்ள படிக்கட்டின் மேற்கூரையில் சுமார் ஒரு அடி விட்ட அளவுக்கு சிமென்ட் பூச்சு வியாழக்கிழமை பிற்பகல் பெயர்ந்து விழுந்தது. இந்த மாடிப்படியில் வழக்கமாக நடமாட்டம் இருக்காது. அதனால், யாரும் காயமடையவில்லை. அடுத்த சில மணிநேரத்தில் பெயர்ந்த இடத்தில் மீண்டும் சிமென்ட் பூசப்பட்டது.
ஏற்கெனவே, இந்தக் கட்டடத்தின் முகப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளப் பாதையின் மேற்கூரையில் சுமார் 2 அடி சுற்றளவுக்கு சிமென்ட் காரை 2016ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி இரவு பெயர்ந்து விழுந்தது. புதிதாகக் கட்டப்பட்ட இக்கட்டடம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டு மட்டுமே கடந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com