தமிழக - ஆந்திர வனப் பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டை

ஆம்பூர் அருகே தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் நக்சல் தடுப்பு போலீஸார் வியாழக்கிழமை தேடுதல் மேற்கொண்டனர்.

ஆம்பூர் அருகே தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் நக்சல் தடுப்பு போலீஸார் வியாழக்கிழமை தேடுதல் மேற்கொண்டனர்.
ஆம்பூரை அடுத்த ஊட்டல் காப்புக்காட்டு பகுதி ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. அதனால் நக்சல் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், நக்சல்கள் தடுப்பு போலீஸார் ஆம்பூர் வருகை தந்தனர். காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் இளவரசன் தலைமையிலான 15 அதிரடிப்படை போலீஸார் மற்றும் ஆம்பூர் வனச் சரக வனவர் கருணாமூர்த்தி தலைமையிலான வனக் காப்பாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை ஊட்டல் காப்புக் காட்டுக்கு வந்த போலீஸார் அங்கிருந்து சாணிகணவாய் மேடு, ரங்கையன் கிணறு, கேசவன் கிணறு, மேகலபண்டை, புட்டன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் இரவு ஊட்டல் பகுதியில் தங்கினர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு வனப் பகுதி வழியாக பேர்ணாம்பட்டு அருகே சாரங்கல் பகுதிக்குச் செல்ல உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com