நிதியமைச்சரானார் டி.ஜெயகுமார்

மீன்வளத் துறை அமைச்சரான டி.ஜெயகுமாருக்கு, நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சரானார் டி.ஜெயகுமார்

மீன்வளத் துறை அமைச்சரான டி.ஜெயகுமாருக்கு, நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மீனவ சமுதாயத்தின் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மட்டுமே வகிக்கும் நிதித் துறையானது, மீன்வளத் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சரிடம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான உத்தரவை ஆளுநர் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன்படி, நிதி, திட்டம், சட்டப் பேரவை, தேர்தல்கள், கடவுச் சீட்டு, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) ஆகிய துறைகள் டி.ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தன்வசம் வைத்திருந்தார்.
இதையடுத்து, மீன்வளத் துறை அமைச்சராக உள்ள ஜெயகுமார், இனி மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என ஆளுநர் மாளிகையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1991-ஆம் ஆண்டு முதல்..: 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரையில், கால்நடை பராமரிப்பு, பால்-மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய துறைகளின் பொறுப்பு அளிக்கப்பட்டது.
2001 முதல் 2006 வரை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
பேரவைத் தலைவர்: 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், சட்டப் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு, அவருக்கு அமைச்சர் பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.
இதன் பின், 2016-ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீன்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com