மே 12 பிளஸ் 2, மே 19 -இல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 12 -ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 -ஆம் தேதியும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 12 -ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 -ஆம் தேதியும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை கூறியது:
பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 முதல் 31 -ஆம் தேதி வரை நடக்கின்றன. 10 -ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8 முதல் 30 -ஆம் தேதி வரை நடக்கிறது.
மாணவர்கள் தேர்வு எழுதிய பிறகுதான் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவிக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தேர்வு நடப்பதற்கு முன்பாகவே வெளியிடுகிறோம்.
முடிவுகள் எப்போது? பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12 - ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 - ஆம் தேதி வெளியாகும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள்: ஆசிரியர் தகுதித் தேர்வைப் பொருத்தவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30 -ஆம் தேதியும் நடைபெறுகின்றன. ஆசிரியர் நியமனம் தொடர்பான கூடுதல் மதிப்பெண் ("வெயிட்டேஜ்') அளிக்க வகை செய்யும் அரசு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது.
நீட் தேர்வு: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு ("நீட்') தேவையில்லை என்பதற்கான சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். அதில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார் செங்கோட்டையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com