ஹைட்ரோ கார்பன் திட்டம்: நெடுவாசலில் போராட்டம்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மக்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மக்கள்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, அப்பகுதி விவசாயிகள், கிராமத்தினர் கடந்த ஒருவாரமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, நெடுவாசல் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நெடுவாசல் பகுதிக்கு சென்ற இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் வரதராஜன், அப்பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை பார்வையிட்ட பின்னர், அப்பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கவிவர்மன், மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பொன்னுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com