100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள் வேலை: தமிழக அரசு அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், பணிநாள்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், பணிநாள்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டமானது தமிழகத்தின் 31 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
நிகழ் நிதியாண்டில் இதுவரை 33.43 கோடி மனித சக்தி நாள்கள் உருவாக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.4,655 கோடி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, வறட்சியின் காரணமாக, மூன்று கோடி மனித சக்தி நாள்கள் அதிகரித்துள்ளன.
தினமும் சராசரியாக 12 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்த நிலையில், 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
முதல்வரின் கோரிக்கை ஏற்பு: வறட்சி காரணமாக, திட்ட நாள்களின் எண்ணிக்கை 150-ஆக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கும் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, 100 நாள்களுக்கும் கூடுதலாக 50 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் ஒரு கோடியே 23 லட்சம் கிராமப்புறத் தொழிலாளர்கள் பயன் அடைவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com