அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்தாளுநர்களை நியமிக்க உத்தரவு

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆறு மாதங்களில் போதுமான அளவு மருந்தாளுநர்களை பணியமர்த்துமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆறு மாதங்களில் போதுமான அளவு மருந்தாளுநர்களை பணியமர்த்துமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த சி.ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.
மனுவில், மருத்துவமனையில் தேவையான மருந்துகள் தடையின்றி கிடைக்கவும், போதுமான மருந்தாளுநர்களை பணியமர்த்தவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தன.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 6 மாதங்களுக்குள் தேவையான மருந்தாளுனர்களை பணியமர்த்த, தமிழக சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com