எந்தப் பெயரில் வந்தாலும் எதிர்ப்போம்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு

மீத்தேன் திட்டம் எந்த பெயரில் கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு.

மீத்தேன் திட்டம் எந்த பெயரில் கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்றார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு.
புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
நெடுவாசல் பகுதியில் மீண்டும் நுழைந்துள்ளது. அப்பகுதி மக்களிடம் எந்தவிதக் கருத்தும் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக இத்திட்டத்தை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. நாங்கள் ஒருபோதும் இத்திட்டத்தை ஏற்க மாட்டோம்.
ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வரை பாதிப்பு இருக்கும் நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 5,400 வறட்சி நிவாரணத் தொகையை ஏற்க முடியாது. 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 17 பேருக்கு மட்டுமே அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் தலா ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த 5 மாதங்களாக விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். வறட்சி நிவாரணத்தில் விவசாயத் தொழிலாளர்கள் குறித்து அறிவிப்பு ஏதும் இல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய வேலை உறுதித் திட்டத்தில் கடந்த ஆண்டில் சராசரியாக 44 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. கூலியையும் முழுமையாக வழங்குவதில்லை.
எனவே, விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் மாதம் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com