கூவத்தூரில் இருந்து தப்பிவந்து சரவணன் எம்எல்ஏ கொடுத்த புகாரின் மீது போலீஸ் விசாரணை துவங்கியது

செங்கல்பட்டை அடுத்த கூவத்தூரில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சசிக்கலா கூவத்தூர் சொகுசு ஓட்டலில் 125 எல்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.
கூவத்தூரில் இருந்து தப்பிவந்து சரவணன் எம்எல்ஏ கொடுத்த புகாரின் மீது போலீஸ் விசாரணை துவங்கியது

செங்கல்பட்டை அடுத்த கூவத்தூரில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சசிக்கலா கூவத்தூர் சொகுசு ஓட்டலில் 125 எல்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.

அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல்வர் பதவிக்கான போட்டியில் அதிமுக பிளவு பட்டது.

இதனையடுத்து அதிமுக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அதிமுக எம்எல்ஏகளை  நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக கூவத்தூரில் உள்ள சொகுசு ஓட்டலில் 125 எம்எல்ஏக்களை கடந்த பிப் 8ந்தேதியில் இருந்து 10நாள்கள் 18ந்தேதி வரை  அடைத்து வைத்தனர்.

18ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்தினம் சொகுசு ஓட்டலில் இருந்து தப்பியதாக கூறி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், எம்எல்ஏக்களை சட்டத்தற்கு புறம்பாக அடைத்துவைத்துள்ளதாகவும், அவர்கள் மீட்டெடுக்கும் படியும்  கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் டிஜிபி அலுவலகத்தில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ கொடுத்த புகாரினை விசாரிக்கும் படி வந்த உத்தரவை அடுத்து கூவத்தூர் காவல்நிலைய போலீஸார். கல்பாக்கம் காவல்நிலைய போலீஸார், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் கல்பாக்கம் அணுமின்நிலைய விருந்தினர் மாளிகையில் ரகசியமாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர்களுடன் வந்த  எம்எல்ஏ சரவணன் புகார் மனுவில்  கூறப்பட்டிருந்ததையே  கூறிவிட்டு சென்றார்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com