வாணியம்பாடியில் மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் தூள் தூளாக காணப்பட்டதால் பரபரப்பு.

வாணியம்பாடி சிமெண்ட் ஷீட் விற்பனை கடை அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் தூள் தூளாக சாலையில் வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடியில் மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் தூள் தூளாக காணப்பட்டதால் பரபரப்பு.

வாணியம்பாடி சிமெண்ட் ஷீட் விற்பனை கடை அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் தூள் தூளாக சாலையில் வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி மலங்கு சாலையில் முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த ஆதம்(55) என்பவருக்கு சொந்தமாக சிமெண்ட் ஷீட்டுகள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்நிலையில் அவரது கடைக்கு இன்று காலை 10 மணியளவில் சேலத்திலிருந்து சிமெண்ட் ஷீட்டுகள் லாரி மூலம் லோடு வந்துள்ளது. அந்த சிமெண்ட் ஷீட்டுகள் உடையாமல் இருப்பதற்காக ஷீட்டுகளுக்கு இடையில் பிளாஸ்டிக் பைகளில் சிறிய தலையனை வடிவலான தைக்கப்பட்ட மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த லோடு இறக்கும் போது மூட்டையிலிருந்து ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டு தூள் தூளாக கீழே கொட்டியது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி பார்த்த போது பழைய ஆயிரம் மற்றும் 500 நோட்டுகள் மற்றும் 100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டு தூள் தூளாக மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  

இதுப்பற்றி உடனே கடை உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வெட்டப்பட்டிருந்த பணம் கருப்பு பணமா அல்லது பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் மாற்ற முடியாமல் வைத்திருந்து வருமான வரித்துறைக்கு பயந்து மர்ம நபர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடியில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுக்களை தூள்  தூளாக வெட்டப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com