விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க 6 கிராமங்கள் தத்தெடுப்பு

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்குடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 6 கிராமங்களை தத்தெடுத்துள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்குடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 6 கிராமங்களை தத்தெடுத்துள்ளது.
"முதலில் விவசாயிகள்' என்ற பெயரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் ரூ.95.34 லட்சத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே சோதனை முயற்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், அதனைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் கோயம்பாக்கம், தண்ணீர்குளம், பண்டிகாவனூர், கரையான்மேடு, மேல்கொண்டையூர், கிளாம்பாக்கம் ஆகிய 6 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.
கோயம்பாக்கம் கிராமத்தில் கால்நடை பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இளநிலை ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், 2 கள உதவியாளர்கள் என 4 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆறு கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்ப உதவி, கால்நடைகளைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்ப உதவி, களநிலை ஆதரவுப் பணிகள், மனையியல் மற்றும் தோட்டக்கலை துறையில் விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் ஆகியவை வழங்கப்படும்.
இதன் மூலம் 6 கிராமத்தில் உள்ள மக்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, கூடுதல் வருமானத்துக்கு வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டத் தொடக்க விழாவில் 6 கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி, ஜப்பானியக் காடை, தாது உப்புக் கலவை, பயிர்களுக்கான உரங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com