ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது: பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் விவரம்: தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் இந்தத் திட்டத்துக்காகத் தோண்டப்படும் ஆழ் கிணறுகளாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இத்திட்டம் தொடரப்படுமேயானால், இந்த தலைமுறையின் உரிமைகள் மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகளும் பறிக்கப்படும் என்று அஞ்சுகிறேன். நெடுவாசலில் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்துக்கு முற்றிலும் விரோதமானது.
ஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்கள் என்பதையும், அந்த எஜமானர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவு இருக்க வேண்டும். எனவே, தமிழக மக்கள் மற்றும் விசாயிகளின் நலன் கருதி, நெடுவாசல் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com