ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அரசு மௌனம் காக்கவில்லை: விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து பேசினார்.
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அரசு மௌனம் காக்கவில்லை: விஜயபாஸ்கர்


நெடுவாசல்: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து பேசினார்.

அவருடன், அதிமுக எம்.பி. செந்தில்நாதனும், நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியனும் நெடுவாசல் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்துப் பேசினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், தமிழக அரசு மௌனம் காக்கவில்லை. அதிமுக அரசுதான் மீத்தேன் திட்டத்தை எதிர்த்தது.
அதிமுக அரசு விவசாயிகளின் நலன் காப்பதில் தான் முனைப்புக் காட்டி வருகிறது என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.பி. செந்தில்நாதன், நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com