இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தேசிய செயலாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தேசிய செயலாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் தேசிய செயலாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கட்சியின் தற்காலிக தேசியத்தலைவரும்,பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலிகுட்டியும், அமைப்புச் செயலாளராக இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி.யும்,பொருளாளராக பி.வி.அப்துல் வஹாப் எம்.பி.யும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com