உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததும் நீதி கேட்டு பயணம்: ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததும், நீதி கேட்டு பயணம் மேற்கொள்வேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததும் நீதி கேட்டு பயணம்: ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததும், நீதி கேட்டு பயணம் மேற்கொள்வேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியது:
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளார் என அனைவருக்கும் தெரியும்.
உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சியும் கட்சியும் இருக்கக் கூடாது என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில்தான் அதிமுக பிடிபட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய அரசின் மூலமான விசாரணை நடைபெற்றால்தான், அனைத்து உண்மைகளும் வெளிவரும்.
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எந்த அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்றுதான் செயல்பட்டோம். தடியடி நடத்த காவல் துறைக்கு நான் (ஓ.பன்னீர்செல்வம்) உத்தரவிடவில்லை.
பேரவையில் போலீஸார்: சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால், நிச்சயம் வெற்றிபெற்றிருப்பேன். பேரவைச் செயலர், அரசின் அனுமதி இல்லாமல் பேரவைக்குள் போலீஸார் நுழைய முடியாது. ஆனால், பேரவை தொடங்குவதற்கு முன்பே போலீஸாரை அவைக் காவலர்களுக்கான உடையையும் எடுத்துவரக் கூறியுள்ளனர். இதுவே விசாரணைக்குரியது.
சிரித்தது குற்றமில்லை: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனைப் பார்த்தது சிரித்தது குற்றம் இல்லை. ஒரு முறை பேரவையில் ஜெயலலிதா சிரிப்புடன் துரைமுருகனைப் பார்த்து, "நீங்கள் நடிக்கச் சென்றிருக்கலாம்' என்றார். அதற்கு துரைமுருகன், "நீங்கள் (ஜெயலலிதா) எல்லாக் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்கிறீர்கள். நன்றாகப் படித்துவிட்டு அவைக்கு வருகிறீர்கள்' என்றார். இதை தவறு என்று சொல்ல முடியுமா?
தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் மீது மிகுந்த மதிப்பு உண்டு. தற்போது தீபா புதிதாக பேரவையைத் தொடங்கியுள்ளார். அவருடன் இணைந்து செயல்படத் தயராகவே உள்ளோம்.
மக்களின் மனதை அறிந்தவர்களாக நடிகர்கள் உள்ளனர். கமல் அவருடைய சொந்த கருத்தைத் தெரிவித்து வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com