ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் காலம் முடிந்து விட்டது: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கருணாநிதி அரசியல் காலம் முடிந்து விட்டது, ஜெயலலிதா காலம் முடிந்து விட்டது என்று ஸ்டாலின் போன்றவர்கள் தமிழக
ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் காலம் முடிந்து விட்டது: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: தமிழகத்தில் கருணாநிதி அரசியல் காலம் முடிந்து விட்டது, ஜெயலலிதா காலம் முடிந்து விட்டது என்று ஸ்டாலின் போன்றவர்கள் தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பதில்சொல்லாமல் தப்பிக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு ஆய்வுதான் மேற்கொண்டுள்ளது. அத்திட்டத்தினால் லாபமா? நஷ்டமா? என்று ஆராயாமல் கண்மூடித்தனமாக அத்திட்டத்தினை எதிர்க்கக் கூடாது. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றாது. திட்டத்தினை பற்றி அறியாமல், புரியாமல் எதிர்ப்பது தமிழகத்துக்கு செய்யும் துரோகமாகும்.
கூடங்குளம் அணு மின் திட்டத்தினை இப்படித்தான் எதிர்த்தார்கள் அத்திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால் தமிழகம் இருளில் மூழ்கியிருக்கும். தொழில் வளர்ச்சி அடைந்திருக்காது.
காமராஜர் ஆட்சிக் காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஏதாவது வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? காவிரிப் பிரச்னை பற்றி பேசுகிற திமுகவினர் தங்கள் ஆட்சிக்காலத்தில் காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு முயற்சித்தார்களா? மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க திட்டம் வகுத்தார்களா? இது தமிழக மக்களுக்கு செய்த துரோகம் இல்லையா? கருணாநிதி அரசியல் காலம் முடிந்து விட்டது, ஜெயலலிதா காலம் முடிந்து விட்டது என்று ஸ்டாலின் போன்றவர்கள் தப்பிக்க முடியாது. அவரும் பதில் சொல்லிதான் ஆக வேண்டும்.
மத்திய அரசு மக்களுக்கு பாதகம் ஏற்படும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாது இதை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன். தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறிவிட்டது என்று ஸ்டாலின் கூறுகிறார் அவர்களது ஆட்சிக்காலத்தில் மட்டும் காவல் துறை எப்படியிருந்தது என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com