"பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளன'

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 49 பேரை குழந்தைசாமி பார்வையிட்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கோவை, திருச்சி, சென்னை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் 1, 500 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே வேளையில், பன்றிக் காய்ச்சலைத் தடுக்க இருமும் போதும், தும்மும் போதும் வாய், மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். அவ்வாறு பின்பற்றினால் நோய்த் தொற்றை 80 சதவீதம் தவிர்க்க முடியும்.
பன்றிக் காய்ச்சல் ஏ,பி,சி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஏ,பி பிரிவுகளில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை தேவையில்லை என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துப் பிரிவுகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பானுமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன் எட்வின் ஜோ, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்தரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com