மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்றார்
மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

திருநெல்வேலி: மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக அரசியலில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.  
பாஜகவுக்கு விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை உள்ளது. இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கா 34 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் முடிவில் விவசாயிகளுக்கு பாதகம் என்ற சூழல் வருமானால் தமிழக பாஜக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும். மாறாக பிற கட்சிகள் புதுக்கோட்டை பகுதி மக்களைத் திசைத்திருப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மீத்தேன் திட்டத்தை பாஜக அரசு ரத்து செய்தது. அதேபோல விவசாயிகளுக்கு எதிரான எந்தச் செயலும் நடைபெறாது என்றார் ஆவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com