விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: அன்புமணி ராமதாஸ்

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: அன்புமணி ராமதாஸ்

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தருமபுரி மாவட்டம் மேல்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி, தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் மலர் வகைகள், சோளம், கேழ்வரகு, தென்னை ஆகிய பயிர்கûளைக் காப்பாற்ற முடியாத சோகத்திலும், கடன் சுமையாலும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுக்கும் தமிழக அரசு, குறைந்த இழப்பீட்டை அறிவித்துள்ளது.
இதுவிவசாயிகளின் தற்கொலையை எந்த வகையிலும் தடுத்து நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான் பெரியசாமியின் தற்கொலையாகும்.
எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிபந்தனையின்றி, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், நீண்டகால பணப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com