ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாராயணசாமி எதிர்ப்பு: கமல்ஹாசன் சல்யூட்..!

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் சல்யூட் என
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாராயணசாமி எதிர்ப்பு: கமல்ஹாசன் சல்யூட்..!

சென்னை: மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் சல்யூட் என தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை பாராட்டி தனது டுவிட்டர் பக்க பதிவில், 'ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக ஒரு தெளிவான நிலைப்பாட்டை தைரியமாக எடுத்த உங்களுக்கு எனது சல்யூட்' என பதிவிட்டுள்ளார்.

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரவில்லை. புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை அறவே ஏற்காது. மாநில அனுமதி இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற முடியாது என நாராயணசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com