ஹைட்ரோ கார்பன் திட்டம்: பிப்.28 -இல் வைகோ ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தைக் கண்டித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், நெடுவாசலில் பிப்ரவரி 28 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம்: பிப்.28 -இல் வைகோ ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தைக் கண்டித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், நெடுவாசலில் பிப்ரவரி 28 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு 2011-இல் மத்திய அரசு அனுமதி வழங்கியது. மீத்தேன் எரிவாயு எடுக்கப்பட்டால் வேளாண் நிலங்கள் நஞ்சாகி, நிலத்தடி நீர் நச்சு வேதிப்பொருள்களால் நாசமாகும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்தையை தற்போ து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தின் நில வளத்தையும், நீர் வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனையும் மத்திய அரசைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் எனது தலைமையில் நெடுவாசலில் செவ்வாய்க்கிழமை (பிப்.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com