ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும்: பாண்டியராஜ்

ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும் என்று திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும்: பாண்டியராஜ்

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டம் விவசாயத்தை அழித்துவிடும் என்று திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பாண்டியராஜ் கூறியதாவது:
நான் இங்கு ஒரு இயக்குநராக வரவில்லை. என்னுடைய சொந்த ஊர் புதுகோட்டை. அங்கு ஒரு பிரச்னை என்று வரும்போது அதற்காக நான் கண்டிப்பாக போராடுவேன்.

புதுகோட்டை மாவட்டம் வானம் பார்த்த கந்தக பூமி. இங்கு விவசாயம் செய்வது மிக சவாலான ஒன்று. அப்படிப்பட்ட விவசாயத்தை நம்பியிருக்கும் இடத்தில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் முயற்சியாகவே இந்த திட்டம் கருதப்படுகிறது.

இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தால் சுமார் 200 கிலோமீட்டர் தூரம் வரை வீரியம் இருக்கும் என கூறப்படுகிறது. பிற்காலத்தில் நானே இங்கு வந்துதான் விவசாயம் செய்யவேண்டிய நிலை வரலாம். அதற்காகவே நான் இங்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன் என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக போராடி அதனை வென்ற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், ஹைட்ரோகார்பன் திட்ட போராட்டத்தையும் வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com