அமெரிக்க வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அமெரிக்காவில் வசித்துவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீநிவாஸ், அவரது நண்பர் அலோக் மடசனியுடன் இருந்தபோது அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதில், அலோக் மடசனி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கத் தேர்தலின்போது, "அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். பிற நாட்டைச் சேர்ந்தவர்களை அனுமதிக்க மாட்டோம்' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்தியர்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது தேர்தல் காலப் பேச்சானது இனவெறியைத் தூண்டியிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதனால் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியர்களே.
எனவே, அமெரிக்க அதிபரிடம் தனது கண்டனத்தை இந்தியா பதிவு செய்யவேண்டும். மேலும் அங்கு கொல்லப்பட்ட பொறியாளரின் உடலை இந்தியா கொண்டுவரவும், அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com