ஓபிஎஸ் திமுகவுடன் கூட்டணி வைத்து செயல்படுகிறார்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவுடன் முன்னாள் முதல் ஓபிஎஸ் கூட்டணி வைத்து செயல்படுகிறார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஈரோடு: அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவுடன் முன்னாள் முதல் ஓபிஎஸ் கூட்டணி வைத்து செயல்படுகிறார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஏன் அவரது படத்தை வெளியிடவில்லை என பலர் கேட்கிறார்கள். 1984-இல் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருடைய படத்தை வெளியிட்டிருந்தார்கள். உடல் நலம் தேறி வந்த பின் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அந்தப் படத்தை ஏன் வெளியிட்டீர்கள் என எங்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். கேட்டார். கட்சித் தலைவர்கள் சிகிச்சை பெறும்போது எந்தப் படத்தையும் வெளியிட விரும்ப மாட்டார்கள்.
 ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது எந்தவிதமான தவறும் நடக்கவில்லை. தற்போதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடக்கிறது என்றார்.

மேலும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக குறிப்பிட்ட செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக ஆசைப்படுபவர் எனவும், கட்சிக்காக பன்னீர்செல்வம் எவ்வித தியாகத்தையும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டினார்.

உங்கள் பின்னால் உள்ளவர்கள் உங்களை கைவிட்டாலும் நாங்கள் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளோம் என்று சட்டமன்ற கூட்டத்தில் பன்னீர்செல்வதிடம்

திமுகவை சேர்ந்த துரைமுருகன் அளித்த வாக்குறுதியினால்தான் முதல்வரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வம் கட்சியை விற்பனை செய்துவிடுவார் என்ற பயத்தில் அவரை முதல்வர் பதவியிலிருந்து விலக்கினோம் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவை

அழிக்க நினைக்கும் திமுகவுடன் ஓபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் ஆறு மாத காலத்திற்குள் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரத்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com